நாம் ராசி பலன் பார்க்கும் போது சந்திராஷடமம் அதனால் கவனம் தேவை எழுதுவர். நாம் பயந்து அன்று எந்த காரியத்தையும் செய்ய மாட்டோம். அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள். சந்திரன் ஏட்டில் நிற்பது சந்திராஷடமம் ஆகும். ஒருவர் பிறந்த ராசியிலிருந்து ஒவ்வொரு ராசியாக கடந்து சந்திரன் எட்டமிடம் வருவது சந்திராஷடமம் ஆகும். எட்டு என்ற எண் கஷ்டங்களை தரும் காரணம் எட்டிற்கு அதிபதியாவர் சனீச்வர பகவான் ஆவர்.
எட்டாம் பிறப்பு எட்டி பார்த்த இடமெல்லாம் குட்டிச் சுவர் என்பது பழமொழி. எட்டாவதாக பிறக்கும் பெண் குழந்தையை சொல்லுவதுண்டு. எட்டாவதாக பிறந்த கிருஷ்ணன் தன் மாமன் கம்சனையே கொன்று தன் குலத்தையே நாசம் செய்தார்.
பௌர்ணமி, அம்மாவாசைக்கு பிறகு வரும் எட்டாவது நாளை அஷ்டமி என்று எந்த ஒரு நல்ல செயலையும் செய்யாமல் ஒதுக்கி வைக்கிறோம் முஸ்லிம்கள்கூட எட்டு, பதினெட்டு, மூன்று, பதிமூன்று ஆகிய எண்கள் ஆகாது என்று கூறுவார். ஏனெனில் எட்டமிடம் ஆயுள், எதிரிகளை குறிக்கும் ஸ்தானம். கெட்டவன் எட்டினில் கிட்டிடும் ராஜயோகம் என்பர். எட்டில் கெட்ட கிரகம் இருந்தால் நன்மை செய்யும், நல்ல கிரகம் இருந்தால் தீமை செய்யும். இது மறைவு ஸ்தானம். பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை தெரிவிப்பது ஆகும். இந்த இடத்தில் நம் மனதுக்கு காரணமான சந்திரன் வரும் போது மனம் சரியாக இல்லாமல் எந்த காரியம் செய்தலும் குழப்பமே வரும் என நினைத்து சந்திராஷடமம் அன்று எந்த செயலையும் செய்ய பயப்படுகிறோம்.

Comments