சபரிமலைக்கு மாலை அணிந்த பிறகு தர்ப்பணம் செய்வது சரிதான். ஐய்யப்பன் பம்பையில் தன்னுடைய முன்னோர்களுக்கு தர்பணம் செய்தார். எந்த செயலையும் தொடங்கும் போது நம்முடைய பித்ருக்குக்களை ( இறந்த முன்னோர்களுக்கு ) நினைத்து வணங்கிய பின்னர் குலதெய்வத்தை வணங்கவேண்டும்.
அவ்வாறு செய்தால் தான் அந்த காரியம் பூர்த்தியாகும். இல்லையேல் எந்த செயல் செய்தாலும் குழப்பங்களும், பிரச்சனைகளும் வந்து சேரலாம். ஒருவருக்கு குழந்தை பிறப்பதற்கு ஜோதிட ரீதியாக பூர்வபுன்னிய ஸ்தானனாதிபதி பலம் இல்லை என்றால் கால தாமதமாகலாம்.
தர்ப்பணம் என்பது தர்ப்பை + அர்ப்பணம் ( சமர்பித்தல்) ஆகும். தர்ப்பை என்பது பவித்ரமான புல் ஆகும். இதை அணிந்து கொண்டு எள்ளை வைத்து பிண்டம் செய்து கொடுப்பதாகும்.எள் என்பது லக்ஷ்மி.
பாற்கடலை கடையும் போது வெளிவந்தவள் லக்ஷ்மி தேவி. இவளை அடைய தேவர்கள், அசுரர்கள் வந்து என்னை திருமணம் செய்துகொள் என்று தங்களுடைய புகழை சொன்னார்கள். ஆனால் தேவி அவர்களை விட்டு வாசுகி கக்கிய விஷத்தினால் உடல் கருத்து இருந்த விஷ்ணுவை நெருங்கி வந்தாள். விஷ்ணு பகவான் அவளை விட்டு ஒதுங்கி போனார். லக்ஷ்மி தேவி அவர் செல்லும் இடத்தில் எள்ளு செடியாக முளைத்து நின்றாள். அவரின் காலால் மிதிபட்டு அவருடன் கலந்தார்.
நாம் செய்யும் தர்ப்பணத்தால் எள்கள் அனைத்தும் விஷ்ணுவில் மேல் படுவதால் அவர் மகிழ்ந்து நிறைய செல்வங்களை கொடுப்பார். இறந்தவர்களுக்கு ஒரு வருடம் என்பது ஒரு நாளாகும். திதி அன்று செய்ய முடியாதவர்கள் பம்பையில் செய்தல் பித்ருக்கு சந்தோசமாகும். அதனால் கண்டிப்பாக மாலை அணிந்தவர்கள் செய்வது நலம் பயக்கும். மற்றும் விரதமாக இருப்பதால் பலன் நூறு மடங்காகும்.
கருத்துகள்