பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் கொண்டது
அன்றாட கிரக அசைவுகளையும், சுப - அசுப நேர ஆதிக்கங்களை அறிந்து கொள்ள உதவுவதாகும். பஞ்சாங்கத்தின் விபரங்களை இனி பார்போம்.
- திதி - நீர் தத்துவம்
- கரணம் - நிலம் தத்துவம்
- நாள் - அக்னி தத்துவம்
- நட்சத்திரம் - வாயு தத்துவம்
- யோகம் - ஆகாயம் தத்துவம்
வானவில் பற்றி ஆய்ந்து அறிந்து முதன்முதலில் பஞ்சாங்கம் வெளியிட்ட பெருமை சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரவையில் வீ ற்றிருந்த ஆரியபட்டரை சாரும். அதன்பின் இதை திருத்தி வெளியிட்டவர் பாஸ்கரசாரியார்.
எந்தவிதமான உபகரனமுமின்றி பண்டைய காலத்தில் அறிந்து தெரிவித்தவர் நம் ஜோதிடர். இவர்கள் இன்றும் வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என்ற இரண்டு பஞ்சாங்கத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். விஞ்ஞான வளர்ச்சியில் கிரகங்களின் அசைவை முன்னோர்களின் அனுபவ அறிவின் துணை கொண்டு துல்லியமாக கணிக்கப்பட்ட, திருத்தப்பட்ட கணித முறையே திருக்கணித பஞ்சாங்கம் ஆகும்.திருக்கணித முறையில் கணிதம் செய்ய கணக்கிடுகளும் பாகை கலை விபர பயன்பாடுகளும் சற்று கடினமாக தோன்றுவதால் பாரம்பரிய வம்சாவழி ஜோதிடர்கள் பலரும் வாக்கிய கணித பஞ்சாங்கம் பயன்படுத்துகிறார்கள்.
கருத்துகள்