காஷ்யப முனிவரின் புத்திரர்களான சிங்கமுகன், சூரபத்மன், தாரகா சூரன் மூவரும் சிவனிடம் சாகவரம் பெற்று அகந்தையால் பல அட்டூழியங்களை செய்து வந்தனர். அவர்களை அழிக்கவே முருகன் அவதரித்தார். சிவனின் அம்சமான சிவகுமாரன் முருகன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். சூரபத்மன் கடலின் நடுவில் வீர மகேந்திரபுரி என்ற பட்டினத்தில் வசித்தான். முருகன் அங்கு வந்து சூரனை போருக்கு அழைத்தார். சிங்கமுகன் மற்றும் தாரகாசூரன் (யானைமுகன்) கொன்று கிரவுஞ்ச மலையையும் அழித்தார். பின்னர் சூரபத்மனுடன் போரிட்டார். அவன் முருகனின் விஸ்வரூபம் கண்டு தன்னை மன்னிக்க வேண்டி மாமரமாக நின்றான். முருகப் பெருமானும் அவனை மன்னித்து மாமரத்தை பிளந்து சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன் வாகனமாகவும் கொடிச்சின்னமாகவும் ஏற்றார். ஐப்பசி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறுதினங்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதாகும். ஸ்கந்த சஷ்டி சிறப்பாக கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். அங்கு முதல் நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி ஆறு நாட்கள் உற்சவத்தில் இறுதி நாள் சூர சம்...
ஜோதிட ரத்னா தா.இசக்கி ராஜ், B.Lit., த/பெ. N.S தாணு, செல் (whatsapp) : 9345934899