தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றார். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்குவிற்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்து சேர்ந்த இடம்தான் விஜயாபதி. கடற்கரைக்கு அருகில் லிங்கத்திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூஜை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறார். ராமபிரான் தாடகையை அழிக்க அஸ்திரம் தொடுத்தார். ராமரின் அஸ்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிகிறாள். தாடகை விழுந்து மடிந்த மலை, தாடகை மலை என்று அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைக்கு அருகில் இருக்கும் தாழக்குடி என்ற இடத்துக்கு அருகில் உள்ள இந்த மலை, ஒரு பெண் படுத்திருப்பதைப் போலவே காட்சி தருகிறது.
யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திர மகரிஷிக்கு தம்பதி சமேதராகக் காட்சி கொடுத்து இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய். மேலும் நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார்.
விசுவாமித்திரர் யாகம் செய்த இடமாதலாலும், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்டதாலும் இங்கு இவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோயில் இருப்பது விஜயாபதியில்
கருத்துகள்