சும்மாகிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி

                        திரிசங்கு என்ற மன்னனுக்கு தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தன்னுடைய குருவான வசிஷ்டரிடம் தன் கருத்தை சொன்னான். அவர் அப்படி எந்த மனிதனாலும் சொர்க்கம் செல்ல முடியாது என்று சொன்னார். அதற்க்கு அவன் யார் ஒருவர் தன் பூத உடலுடன் சொர்க்கம் செல்ல வழி செய்பவரே இனி என்னுடைய குருவாவார் என்றான்.

                     

வசிஷ்டருக்கு கோபம் வந்தது உடனே நீ நோயுள்ளவனாக மாறுவாய் என சாபமிட்டார். அதனால் திரிசங்குவிற்கு உடல் கலை இழந்தது நாட்டை விட்டு காட்டிற்கு சென்றான். ஒருநாள் விஸ்வாமித்திரர் வருவதை கண்டு வணங்கினான். அவர் யார் நீ என கேட்டதற்கு நடந்த விபரத்தை சொன்னான். விஸ்வாமித்திரர் திரிசங்குவிற்கு தன் தவ வலிமையினால் சொர்கத்திற்கு அனுப்பினார்.

                         அங்கு தேவ தூதர்கள் இந்திரனிடம் போய் சொன்னார்கள். இந்திரன் திரிசங்குவை காலால் எட்டி உதைத்தான். திரிசங்கு கீழே விழும் போது விஸ்வாமித்திரரை அழைத்தான். அவர் அவனை அங்கேயே நிற்க செய்து தன் தவ வலிமையால் ஒரு சொர்க்கத்தையே உண்டாக்கினார். அதுவே திரிசங்கு சொர்க்கம் ஆகும்.

                         அவர் தன் தவ வலிமை அனைத்தும் இழந்து மீண்டும் தவம் செய்ய சென்றார். சும்மா இருந்த திரிசங்கை நான் உனக்கு உதவுவேன் என்று தன் தவ வலிமையை கொடுத்தான் ஆண்டி (விஸ்வாமித்திரர்). நாம் உணர்ச்சிவசப்படுவதால் நிறைய இழப்புகளை சந்திக்கிறோம். ஆகவே நிதானமாக யோசித்து செய்தால் வெற்றி பெறலாம்.

கருத்துகள்