ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் வேட்டையாடுவதற்காக படைபரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்று வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமம் பக்கமாக வருகிறார். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பினார்.
கௌசிகனிடம் நீங்களும் உங்களுடைய படையினரும் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டுமென்றார். .
கெளசிகர் காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் இருக்கும் நீர் இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியுமா என்றார்.
ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த பசுவிடம் அனைவருக்கும் அறுசுவை உணவு வேண்டும் என்றார். உடனே பசு உணவளித்தது.
ஆசிரமத்தில் கேட்டதைத் தரும் அட்சய பாத்திரமான தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன் நாட்டின் மன்னனான என்னிடம் தான் பசு இருக்க வேண்டும் என்று பசுவை தருமாறு கேட்டார் வசிஷ்டர். அந்த பசு தவத்தின் பலனாக கிடைத்ததால் கொடுக்க மறுத்தார்.
தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வரச் சொன்னார். வசிஷ்டர் சாபத்தால் படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.
வசிஷ்டரின் தவ பலனை கண்டு கௌசிகன் தானும் தவம் செய்வேன் என்றார். அரச வாழ்க்கை வாழ்ந்த நீ கடும் தவம் புரியமுடியாது என்றார் வசிஷ்டர்.
கடும் தவம் புரிந்து பிரம்மரிஷி பட்டம் பெறுவேன் என்று சபதம் செய்து தவம் இயற்றச் சென்றார்.
கருத்துகள்