திருமாலின் இரண்டாவது அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். இவ்வதாரம் கிருத யுகத்தில் நடைபெற்றது.
சிரஞ்சீவியாக வாழச் செய்யும் அமிர்தம் கிடைக்கும் பொருட்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை இறைவனின் ஆணைப்படி கடைய ஆயத்தமானனர்.
அப்போது மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். அப்போது மலை அதன் பாரம் தாங்காது கடலில் வீழ்ந்தது. திருமால் ஆமையாக கூர்ம அவதாரம் செய்து மலையைத் தாங்கி கடலையை கடைய துணைபுரிந்தார்.
இவ்வதார மூர்த்தியானவர் உடலின் மேல்பாகத்தில் நான்கு கைகளுடன் தேவரூபத்திலும், கீழ்பாகத்தில் ஆமையின் உருக்கொண்டும் அருள் புரிகிறார்.
ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் என்னும் ஊருக்கு அருகில் சுமார் 20கிமீ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்னுமிடத்தில் ஸ்ரீகூர்மநாதர் என்னும் பெயரில் கூர்ம அவதாரத்தில் அருள்புரிகிறார்.
கருத்துகள்