ஆழ்வார்கள் தம்முடைய தமிழ் பாசுரங்களால் வைணவ சமயக் கடவுளான திருமாலைப் போற்றி பாடி மகிழ்ந்தவர்கள். திருமாலின் அடியவர்களான இவர்கள் திருமாலின் பெருமையும், தமிழின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தியவர்கள்.
வடமொழியில் உள்ள வேதங்களுக்கு இணையாக இவர்களின் பாசுரங்கள் போற்றப்படுகின்றன. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புநாலாயிர திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
ஆழ்வார்களின் காலம் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை என்று கருதப்படுகிறது.
இவர்கள் காலத்தால் மற்றைய ஆழ்வார்களுக்கு முந்தியோர் ஆதலால் முதல் ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் சமகாலத்தினர் ஆவர்.
முதல் ஆழ்வார்கள் மூவரும் தாயின் வயிற்றில் பிறக்காமல் தானே தோன்றி இறைவனால் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்ற சிறப்பினை உடையவர்கள.
மதுரகவி ஆழ்வார் மட்டும் இறைவனைப் பாடாமல் மற்றொரு ஆழ்வாரான நம்மாழ்வாரைப் பற்றிய பாசுரங்கள் பாடியுள்ளார்.
ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவார்.
1. பொய்கையாழ்வார்
2. பூதத்தாழ்வார்
3. பேயாழ்வார்
4. திருமழிசை ஆழ்வார்
5. நம்மாழ்வார்
6. திருமங்கையாழ்வார்
7. குலசேகர ஆழ்வார்
8. பெரியாழ்வார்
9. ஆண்டாள் நாச்சியார்
10. தொண்டரடிப் பொடியாழ்வார்
11. மதுரகவி ஆழ்வார்
12. திருப்பாணாழ்வார்
கருத்துகள்